உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் “சிங்கப்பூர் டாப்” – இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

Singapore worlds-most-powerful-passport

உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகியவை முதலிடத்தை பிடித்துள்ளன.

அதாவது மேற்கண்ட நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 194 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

சிறுமியை தொடர்ந்து நாசம் செய்து வந்த ஆடவர்: 24 பிரம்படி, 29 ஆண்டுக்கு மேல் சிறை

கடந்த ஐந்தாண்டுகளாக சிங்கப்பூரும் ஜப்பானும் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

2024ஆம் ஆண்டின் உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் அடங்கிய பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வெளியிட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (IATA) தரவுகளின் அடிப்படையில் இவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 193 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 3வது இடத்தை பிடித்துள்ளன. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மக்கள் விசா இல்லாமல் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான நாடுகள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது, அவர்கள் விசா இல்லாமல் 28 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையே விரைவு ரயில் பாதை: வெறும் 5 நிமிடத்தில் இருநாடுகளுக்கும் பயணிக்கலாம்