56 வயதில் 26 வயது இளைஞர் போல் இருக்கும் சிங்கப்பூர் நபர்!

Photo: Chuando Tan Official Instagram Page

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் 56 வயதான சுவாண்டோ டேன். இவர் 20 வயது முதலே தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். மது அருந்துதல், புகைப்பிடிப்பது உள்ளிட்ட எந்த பழக்கங்களும் இல்லாதவர். இவரது உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த சிங்கப்பூரர்களில் 1,270 பேர் பணி நீக்கம்”- நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் தகவல்!

அதில், அவர் 26 வயது இளைஞர் போல் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக, சுவாண்டோ டேன் உடலில் வயிற்றில் சிக்ஸ் பேக்குடனும், முகத்தில் ஒரு சிறு சுருக்கம் கூட இல்லாமலும் இருக்கிறார்.

இது குறித்து சுவாண்டோ டேன் கூறியதாவது, “நான் 20 வயது முதலே தினமும் ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். காலையில் அவித்த ஆறு முட்டைகளை சாப்பிடுவேன். மதியம் அதிகளவில் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்வேன். வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிக்கன், பீப் எடுத்துக் கொள்வேன். சாதத்தை மிகக் குறைவாக சாப்பிடுவேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நான் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன். இதைப் பின்பற்றினால் யாரு வேண்டுமானாலும் இளமையாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இனி விமானங்களில் இப்படி நடந்தால் இதுதான் தண்டனை! – விமானத்தில் போதையில் இருக்க தடையா!

சிங்கப்பூர் மட்டுமின்றி உலகம் முழுவதும் இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. வயதானவர்களும் உடற்பயிற்சி செய்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம் என்றால் மிகையாகாது.