வெளிநாட்டு ஏர்போர்ட்டில் பிடிபட்ட சிங்கப்பூரர்கள் – 14 கிலோ போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிப்பு

வெளிநாட்டு ஏர்போர்ட்டில் பிடிபட்ட சிங்கப்பூரர்கள் - 14 கிலோ போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிப்பு
Ninoy Aquino International Airport-Bureau of Customs

சிங்கப்பூர் பெண் ஒருவரும் அவரது மகளும் மணிலாவில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (செப். 28) கைது செய்யப்பட்டனர்.

சுமார் S$1.83 மில்லியன் மதிப்புள்ள 14.36 கிலோ போதைப்பொருளை அவர்கள் கடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

அந்நாட்டின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருட்களை கைப்பற்றியதாக மணிலா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் 63 வயதான உணவக ஊழியர் சித்தி ஆயிஷா அவாங் மற்றும் அவரது மகள் நூர் அலவியா ஹனாஃப் (39) ஆகியோர் பிடிபட்டனர், அவரின் மகள் மேக்கப் கலைஞராக பணிபுரிகிறார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் பிடிபட்ட சந்தேக நபர்கள் பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு