தமிழ்நாட்டில் 2 பெண்களை ஏமாற்றியதாக சிங்கப்பூர் போலீசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

Puthiya Thalaimurai

இந்தியாவில் இரண்டு பெண்களை ஏமாற்றியதாகக் கூறி சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவரின் புகைப்படங்களை ஏந்தியபடி சுமார் 12 பேர் கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாட்டு திருவாரூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

சிங்கப்பூர் காவல் படையில் உதவிக் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் 39 வயதான திரு ஏ. முகமது ரபீக் அப்துல் காதர், இரு பெண்களின் குடும்பங்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புக்கு வரதட்சணை வாங்கி, அந்த பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

பிழைப்புக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், சடலமாக செல்லும் சோகம்… மேலும் ஒரு ஊழியர் மரணம்

ஆனால், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித் தராமல் அவர் விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் மூன்றாவது திருமணம் செய்யவும் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் கூறுகையில், தனது முன்னாள் மனைவிகளின் குடும்பத்தினர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தன்னிடம் இருந்து அதிக பணம் பெறவும் இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார் அவர்.

தமிழ் செய்தி நிறுவனமான புதிய தலைமுறை இதுபற்றி செய்தியில் கூறுகையில்; அவர் 2014 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திருமதி தஸ்லீமாவை மணந்தார் என்றும், வரதட்சணையின் ஒரு பகுதியாக 150 சவரன் நகைகள் மற்றும் 500,000 ரூபாய் (S$8,900) மதிப்புள்ள ஒரு கடிகாரத்தைப் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணமான சில நாட்களுக்குப் பிறகு அவர் மனைவியை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதாகவும், வரதட்சணையைத் திருப்பித் தராமல் விவாகரத்து கோரியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே போல, இந்திய நாட்டவரான தனது இரண்டாவது மனைவி திருமதி அமீர் நிஷாவை திரு ரஃபீக் 2020 இல் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவரின் குடும்பத்தாரிடம் இருந்து 101 சவரன் நகைகள், ஒரு ரோலக்ஸ் வாட்ச், ஒரு பிளாட்டினம் மோதிரம் மற்றும் $5,000 ரொக்கமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சிங்கப்பூர் செய்தி நிறுவனம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திரு ரஃபீக்கை தொடர்பு கொண்ட போது, ​​ அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Warehouse கிடங்கில் பயங்கர தீ.. 13 அவசர ஊர்திகளுடன் விரைந்து சென்றது SCDF