சிங்கப்பூரில் 2 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஆடவர் தடுத்து வைப்பு

Singaporean detained under ISA after planning to attack Muslims at 2 mosques
Singaporean detained under ISA after planning to attack Muslims at 2 mosques (Photo: MHA)

முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியதாக 16 வயது சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் டிசம்பர் மாதம் தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று (ஜனவரி 27) தெரிவித்தனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான மார்ச் 15 அன்று உட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் முஸ்லிம்களைத் தாக்க அவர் திட்டமிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய அளவில் வியாபாரம்…ஊழியர்களுக்கு 16 மாதம் வரையிலான போனஸ் – Sheng Siong சூப்பர்மார்கெட்

இந்திய இனத்தைச் சேர்ந்த அந்த ஆடவர் ஒரு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படும் இளைய நபர் இவர்தான் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ISD) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முதல் இளைய கைதி இவர், என்றும் ISD தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இவருக்கு தாக்கமாக அமைந்ததாக ISD கூறியுள்ளது.

இஸ்லாத்தின் மீதான வலுவான விரோதப் போக்கு மற்றும் வன்முறையின் மீதான மோகத்தின் காரணமாக இவர் ஈர்க்கப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது.

அவர் இங்குள்ள இரண்டு மசூதிகளைத் தாக்க விரிவான திட்டங்களைத் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது Assyafaah மசூதி மற்றும் யூசோஃப் இஷாக் மசூதியை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஏனெனில், மசூதிகள் அவரின் வீட்டிற்கு அருகில் இருந்ததால் அதனை தனது இலக்குகளாகத் தேர்ந்தெடுத்தார் என்று ISD கூறியுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ள, இரு மசூதிகளிலும் கூகிள் மேப்ஸ் மற்றும் ஸ்ட்ரீட் வியூவைப் பயன்படுத்தி ஆன்லைன் உளவு மற்றும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 3 பேருக்கு புதியவகை B117 தொற்று – Work permit வைத்திருப்பவர் ஒருவர் பாதிப்பு