பணிநீக்கம் செய்த பின்பும், சட்டத்தை மீறி லாரி ஓட்டிய நபருக்கு சிறை!

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
Photo: Freepil

ஏற்கனவே மிகவும் மோசமாக லாரி ஓட்டியதன் காரணமாக வாகனம் ஓட்டுவதில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கெர்வின் ஆங் சின் வீ (வயது 39) என்ற சிங்கப்பூரர்.

இவர் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக ஓட்டி வந்த லாரியை மோதி விபத்திற்கு உள்ளாக்கியதால் அவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் S$ 1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங்கின் புதிய தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலை!

மேலும் அவர் 8 ஆண்டுகளுக்கு அனைத்து வகுப்பு வாகனங்களையும் ஓட்டுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடன் பயணம் செய்த திரு. கியூ லியான் கூய் (வயது 23) என்ற மலேசியர் மூளையில் அடிப்பட்டு இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை படுக்கையில் இருந்தார்.

மூளையில் காயம் ஏற்பட்டதால், அவரால் பேசவோ அல்லது நடக்கவோ முடியாமல் படுத்த படுக்கையாகவே கிடந்ததாக, தற்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் திரு. தீரஜ் ஜி சாய்னானி (அரசு வழக்கறிஞர்) தெரிவித்தார்.

இந்த விபத்து 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்துள்ளது என்பதும், இவ்விபத்து நிகழ்வின் போது அவர் லாரிக்கான 70 கிமீ வரம்பை விட 145 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட கெர்வின் ஆங்கிற்கு நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் தண்டனை வழங்கப்பட்டது.

அக்டோபர் 20 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய விதி!