100 நாட்கள்.. சுமார் 7,400 கிமீ.. 15 நாடுகளுக்கு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த சிங்கப்பூரர்!

singaporean-north-cape-tarifa-self-supported-bike-adventure
Lawrence Loh

சிங்கப்பூர்: ஐரோப்பா முழுவதும் 100 நாட்களுக்கு மேல் சுமார் 7,400 கிமீ சைக்கிள் ஓட்டி சிங்கப்பூரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

37 வயதான லாரன்ஸ் லோ (Lawrence Loh) என்ற அவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிள் ஓட்டி வரும் தீவிர அல்ட்ரா மராத்தான் சைக்கிள் ஓட்டும் வீரர்.

வெளிநாட்டு ஊழியர்களை தூங்க விடாமல் தொல்லைதரும் மூட்டை பூச்சி: மன அழுத்தம், ஆன்சிட்டி ஏற்படும் அபாயம் – என்னதான் செய்றது?

சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் படி, 7,400-கிமீ நார்த்கேப்-டரிஃபா சுய-ஆதரவு சைக்கிள் சாகசத்தை முடித்த 20 சைக்கிள் ஓட்டுநர்களில் ஒரே ஆசியர் இவர் ஆவார்.

இதுவே உலகின் மிக அதிக தூரம் கொண்ட சைக்கிள் பந்தயம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

அதாவது ஐரோப்பா முழுவதும் வடக்குப் புள்ளியிலிருந்து தெற்குப் புள்ளி வரை இந்த பந்தயம் நடைபெற்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 20 முதல் செப். 29 வரை, 15 நாடுகளை கடந்து சைக்கிள் ஓட்ட அதற்காக சுமார் 100 நாட்களுக்கு மேல் லோ எடுத்துக்கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்