வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

Singaporean woman takes migrant worker as godson
Deborah (left) and migrant worker Dulal (PHOTO: Screengrab/YouTube/8world)

சிங்கப்பூர் பெண் ஒருவர், புலம்பெயர்ந்த ஊழியரை தெய்வ மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார். தனது மாமியாருடன் ஊழியர் கொண்டிருந்த அன்பான பிணைப்பைக் கண்டு, அவருடனான உறவை நீட்டித்து கொண்டதாக பெண் கூடியுள்ளார்.

ஊழியரின் பெயர் துலால் என்றும், ஆனால் என் மாமியார் அவரை சுகர் என்று அழைப்பார் எனவும் டெபோரா என்ற பெண் யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் – செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்

கட்டிட வேலை

“துலால் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் கட்டிட வேலை செய்தார், சில நேரங்களில் ஊழியர்கள் வேலை களைப்பில் எங்கள் வீட்டிற்கு வெளியே மரத்தடியில் அமர்ந்திருப்பார்கள், மற்ற வீட்டு காரர்கள் அவர்களை அங்கிருந்து போக சொன்னாலும் கூட, என் மாமியார் அவர்கள் ஓய்வெடுக்க இடத்தை ஒழுங்கமைத்து கொடுத்து தூங்கவும் அனுமதி அளிப்பார்” என டெபோரா கூறியுள்ளார்.

38 வயதான துலால் என்ற அந்த ஊழியர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் சுமார் 13 ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ளார்.

இது குறித்து துலால் கூறியதாவது; “நான் ஆங்கிலம் பேசுவேன் ஆனால் பாட்டி (பெண்ணின் மாமியார்) மலாய் பேசுவார். எனக்கு மலாய் புரியாது, அதனால் சாப்பிட்டீங்களா, எப்படி இருக்கீங்க என்று நான் அவரிடம் கேட்பேன்,” என்று துலால் கூறியுள்ளார்.

துலால் செய்த உதவி

பாட்டிக்கு (மாமியார்) உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது, ​​தனக்கு கிடைத்த 30 நிமிட வேலை இடைவேளையில் கூட சைக்கிள் ஓட்டி அவர்கள் தேவைகளை துலால் நிறைவேற்றி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இப்படி போய்க்கொண்டு இருக்க.., 2018 இல் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போனது, அது குறித்து துலாலுக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து வந்தார் டெபோரா. துலாலும் மருத்துவமனைக்குச் சென்று பாட்டியை நேரில் சந்தித்து வந்துள்ளார்.

மருத்துவனைக்கு அழைத்து செல்வதிலும் அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார் ஊழியர் துலால். இதனால் அவர்களுக்குள்ளான அன்பு அதிகரித்தது.

பாட்டியின் இறப்பு

பாட்டி இறப்பதற்கு முன்பு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி இருக்கையில், பாட்டியைப் பார்க்க துலால் சென்றுள்ளார். இறப்பதற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் வரை பாட்டி தன்னையே பார்த்து கொண்டிருந்ததாக துலால் கூறியுள்ளார்.

இறந்த பின்னர் பாட்டியின் புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் தான் சோகத்தில் மூழ்குவதாகவும், சில சமயங்களில் அழுததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“அவரை என் சொந்த பாட்டி போல் உணர்கிறேன். நான் என் அம்மாவை இழந்துவிட்டேன், அதே போன்ற வலியை தான் நான் பாட்டியை இழந்த போதும் உணர்ந்தேன்,” என்று துலால் கூறினார்.

பாட்டியின் மரணத்திற்குப் பிறகு, டெபோரா துலாலை தனது தெய்வ மகனாக தத்தெடுத்துக் கொண்டார், அதனால் சிங்கப்பூரில் ஒரு தாய்வழி உறவை துலால் பெற்றுள்ளார்.

சனிக்கிழமைகளில் இரவு உணவிற்குச் வீட்டுக்கு வரும்படியும், அவர்களின் வீட்டை தனது சொந்த வீடாகக் கருதவும் டெபோரா வலியுறுத்தி கூறியுள்ளார்.

ஊழியரிடம் வாக்குறுதி

எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் கூற வேண்டும் என்றும் தாம் அதை சரிசெய்வதாகவும் டெபோரா ஊழியரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

துலாலுடனான இந்த அன்பான உறவு தனது மனதை கவர்வதாகவும், “​​​நாம் அனைவரும் ஒன்றுதான் என்றும், அன்பில் அனைவரும் சமம் தான் என்றும் டெபோரா குறிப்பிட்டுள்ளார்.

ஒரே மொழியைப் பேசாவிட்டாலும், அவரின் செயல்கள் வார்த்தைகளை விட சக்தி வாய்ந்தவை என்பதை மகிழ்ச்சியுடன் அவர் கூறி முடித்தார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஊழியர்கள் கவனத்திற்கு – இத ஒருபோதும் செய்யாதீங்க