“சவுதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

சவுதி அரேபியாவில் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சுமார் 1,500 ஊழியர்களை பணியமர்த்த உள்ள சிங்கப்பூரின் OCBC வங்கி!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) நேற்று (26/03/2022) வெளியிட்டிருந்த அறிக்கையில், சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் (25/03/2022) ஜெட்டாவில் (Jeddah) உள்ள அரம்கோ எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் (Aramco’s oil storage facilities) உட்பட பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை மற்றும் நியாயப்படுத்த முடியாது.

இந்த தாக்குதலில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் அந்நாட்டுக்கு பயணம் செய்யும் அனைத்து சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் இ-பதிவு செய்யுமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

சிங்கப்பூரில் திருவள்ளுவருக்கு இவ்வளோ பெரிய கௌரவமா? ஆச்சர்யப்பட வைக்கும் பின்னணி!

தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் ரியாத்தில் (Singapore Embassy in Riyadh) உள்ள சிங்கப்பூர் தூதரகம், ஜெட்டாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் (Singapore Consulate-General in Jeddah) அல்லது 24 மணி நேர வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பணி அலுவலகத்தை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும்.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு சிங்கப்பூர் கண்டனம்!

ரியாத்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

தொலைபேசி எண்: +966-11-480-3855,
அவசர தொலைபேசி உதவி எண்: +966-50019-1220,
மின்னஞ்சல் முகவரி: Singemb_ruh@mfa.sg.

ஜெட்டாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம்:

தொலைபேசி எண்: +966-12-607-3980/3981,
அவசரத் தொலைபேசி உதவி எண்: +966-50-559-6481,
மின்னஞ்சல்: Singcg_JED@mfa.sg.

24 மணி நேரமும் இயங்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:

தொலைபேசி எண்: +65-6379-8800/8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.