‘துருக்கியில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு’- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்!

Twitter Image

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அந்த இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இ- பதிவுச்செய்யப்பட்ட சிங்கப்பூரர்களை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அணுகியுள்ளது. தூதரக உதவி தேவைப்படுவோர் அங்காராவில் உள்ள தூதரகம் (Singapore Embassy in Ankara), இஸ்தான்புல்லில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தையோ (Singapore Honorary Consulate-General in Istanbul) (அல்லது) 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தையோ தொடர்புக் கொள்ளலாம் என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அங்காராவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

தொலைபேசி எண்கள்: +90 312 442 4330 / +90 530 066 7331,
மின்னஞ்சல் முகவரி: singemb_ank@mfa.sg.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் பிரதமர்!

இஸ்தான்புல்லில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகம்:

தொலைபேசி எண்: +90 212 339 1852,
மின்னஞ்சல் முகவரி: info.singaporeconsul@fibaholding.com.tr.

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:

தொலைபேசி எண்கள்: +65 6379 8800/8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.