அதிக அளவில் சிங்கப்பூர் பெண்களை மணக்கும் வெளிநாட்டு ஆடவர்கள்!

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூர் பெண்கள் அதிகமானோர் வெளிநாட்டு ஆண்களை திருமணம் புரிந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டில் சுமார் 1,727 பெண்கள் திருமணம் செய்தனர், அது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75 சதவீதம் அதிகம். அச்சமயம் வெறும் 989 பெண்கள் மட்டுமே வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்தனர்.

பெடோக் நார்த் 7வது மாடியில் தீ: சமையலறை விளிம்பில் 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

கடந்த 20 ஆண்டுகளில், ஆண்களையும் சேர்ந்து ஒட்டுமொத்த சிங்கப்பூர்களில் 75% பேர் வெளிநாட்டவரை மணந்ததாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 4,426 சிங்கப்பூர் ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்துள்ளனர், 2000ஆம் ஆண்டு அது 3.834ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர் என்பவர் சிங்கப்பூரர் அல்லாதோர் மற்றும் நிரந்தரவாசி அல்லாதோர் என்றும் அந்த தரவு கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டு 60% ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரரை திருமணம் செய்துள்ளனர்.

தங்கும் விடுதியில் வசிக்கும் இந்திய ஊழியருக்கு தொற்று பாதிப்பு – விவரம்