பாராலிம்பிக் போட்டி: டோக்கியாவிற்கு புறப்பட்ட சிங்கப்பூர் வீரர்கள்.!

Singapores athletes participate Paralympics
Pic: Singapore national paralympic council

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்க உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு நேற்று (ஆகஸ்ட் 19) புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிங்கப்பூர் அணியினர் பெருமைப்பட வேண்டும்; அதிபர் ஹலிமா யாக்கோப்!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், சிங்கப்பூர் சார்பில் 10 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். குதிரையேற்றம், நீச்சல், எடை தூக்கும் போட்டி ஆகியவற்றில் அவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில், 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை கடந்த ஆண்டுகளில் சிங்கப்பூர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி, புரூணையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…!