ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

கடந்த ஜூன் 22- ஆம் தேதி அன்று காலை ஆப்கானிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 100- க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தனர். இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஜூன் 26- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சுமார் 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் அரசு, 50,000 அமெரிக்க டாலர்களை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 22- ஆம் தேதி அன்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் (Singapore Red Cross- ‘SRC’) பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் 50,000 அமெரிக்க டாலர்களை விதைப் பணமாக அளிக்கும்.

மார்சிலிங் கிரசண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

இது சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ஆப்கானிஸ்தானுக்கு அறிவித்த 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவிக்கு துணைபுரியும். மேலும், இந்த நிதியின் மூலம் தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் பூர்த்திச் செய்யப்படும். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.