வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக அளவில் வேலை: கட்டுமானம், உற்பத்தியில் வேலைவாய்ப்பு அமோகம்

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் இந்த 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஊழியர் சந்தை தொடர்ந்து மேம்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை தவிர்த்து, மொத்த வேலைவாய்ப்பு 75,600 என அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டின் 66,500 என்ற எண்ணிக்கையை விட அது அதிகம்.

டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு சிறை

செப்டம்பர் 2022 நிலவரப்படி, மொத்த வேலைவாய்ப்பு தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விட 1.7 சதவிகிதம் தாண்டியதாக என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (அக். 28) தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பகுதி முன்னேற்றம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது, முக்கியமாக கட்டுமானம் மற்றும் உற்பத்தியில் வேலைவாய்ப்பு அமோகமாக இருந்தது.

மேலும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இருப்பினும் அதிகரிப்பின் வேகம் குறைந்துள்ளது என்று MOM குறிப்பிட்டது.

இருப்பினும்கூட மூன்றாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் மற்றும் ஆட்குறைப்பு அதிகரித்தன.

ஆட்குறைப்புகளின் எண்ணிக்கை முந்தைய காலாண்டில் எப்போதும் இல்லாத அளவு 830ல் இருந்து 1,600 ஆக அதிகரித்துள்ளது.

கல்லாங்-பாயா லெபார் அதிவிரைவுச் சாலையில் 9 வாகனங்கள் மோதி கடும் விபத்து