‘சித்தார் வாசித்த சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்’- வீடியோவைப் பகிர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

'சித்தார் வசித்த சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்'- வீடியோவைப் பகிர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
Photo: DPM Lawrence Wong Official Twitter Page

 

சிங்கப்பூர் நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார்.

மதுபோதையில் இருந்த ஆடவர் மீது செருப்பு, துடைப்பங்களை வீசி, கழிவுகளை ஊற்றிய இளையர்கள் குழு – யார் அந்த ஆடவர்?

சுமார் 1.22 நிமிடம் நீளம் கொண்ட இந்த வீடியோவில், சித்தார் இசை கலைஞர் கார்த்திகேயன் என்பவர், சித்தார் கருவிக் குறித்தும், அதை கையாளும் முறைக் குறித்தும், இசைப்பது குறித்தும் கற்றுக் கொடுத்தார். அதைப் பின்பற்றி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சித்தார் இசை கருவியைப் பிடித்து இசைத்து அசத்தினார். வீடியோ முடிவில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று இருவரும் சேர்ந்து வாழ்த்துக் கூறினார். இவை அந்த வீடியோ பதிவில் இடம் பெற்றிருந்தது.

கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல்.. மெத்தையை வைத்து ஜன்னலை மூடும் குடியிருப்பாளர்களின் நிலை

இந்த வீடியோவை 1.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்ததுடன், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்- கின் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், “சித்தார் மீதான உங்கள் ஆர்வம் தொடர்ந்து வளரட்டும்; மற்றவர்களை ஊக்குவிக்கட்டும், இந்த இனிமையான முயற்சிக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.