எகிப்தின் பிரமிடுகளுக்கு மேல் வானத்தில் பறந்து சிங்கப்பூர் வீராங்கனை சாகசம்

Ewan Cowie via Kyra Poh / FB

சிங்கப்பூரை சேர்ந்த 19 வயதான கைரா போ (Kyra Poh) எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்கு மேல் வானத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

சிங்கப்பூர் உட்புற ஸ்கைடைவிங் சாகச வீராங்கனை, 43 முயற்சிகள், இரண்டு வார கடுமையான பயிற்சிக்கு பிறகு, ஸ்பெயினில் உரிமம் பெற்ற வெளிப்புற ஸ்கைடைவர் என்ற சான்றிதழை சமீபத்தில் பெற்றார்.

விடுதிகளில் முடங்கி கிடக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் எப்படி உதவுவது?

போ தனது எட்டு வயதிலேயே உட்புற ஸ்கைடைவிங் சாகசத்தை தொடங்கினார், மேலும் iFly சிங்கப்பூரில் தனது ஆர்வத்தை மேலும் மெருகேற்றினார்.

அதனை தொடர்ந்து அவர், பல உட்புற ஸ்கைடைவிங் போட்டிகளில் தங்கம் வென்று சாதனைகளையும் நிகழ்த்தினார்.

அவர் அந்த உரிமத்தைப் பெற்ற பிறகு, மிக சமீபத்தில் பிரமிடுகளுக்கு மேல் வானத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களும், பண்டிகை கொண்டாட்டமும்…