விடுதி வெளிநாட்டு ஊழியர்களும், பண்டிகை கொண்டாட்டமும்…

(Photo: Kirsten Han)

அடுத்த மாதம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இந்த ஆண்டும் இவர்களுக்கு வழக்கமான கொண்டாட்டமாக இருக்காது என்று நினைக்க தோன்றுகிறது.

ஆம், சிங்கப்பூரில் கோவிட்-19 பரவியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளாக தங்களுடைய தங்கும் விடுதிகளிலேயே அடைப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த ஊழியர்களைப் பற்றி கூறுகிறோம்.

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டத்தில் SIA, Scoot விமான சேவைகள் விரிவு

சிங்கப்பூரில் உள்ள சுமார் 300,000 புலம்பெயர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் கடந்த ஏப்ரல் முதல் தங்களுடைய தங்கும் விடுதிகளிலேயே பாதுகாப்பு காரணமாக தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியே செல்ல பல நூற்றுக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலைக்குச் செல்வதைத் தவிர, ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஊழியர்களை பொறுத்தவரை தீபாவளியைக் கொண்டாட்டம் என்பது மிகவும் குறைவாக தான் இருந்துள்ளது.

ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் அவர்களின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். பண்டிகை காலங்களில் குடும்பங்கள் ஒன்றாக இருக்க விரும்புவது இயல்பு.

இந்த ஆண்டும் தொற்று பரவல் காரணமாக அவர்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. தன் குடும்பம் மகிழ்ச்சியாய் இருந்தால் போதும் என்று தன்னை பற்றி கவலைப்படாத பெரும்பாலான ஊழியர்கள் இருக்கும் சூழலில், அவர்களின் வருகையை எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களுக்கு விரைவில் நற்செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம்.

சமீபத்தில், இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் நீக்கியுள்ளது, மேலும் VTL திட்டத்தின்கீழ் பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்களை சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன.

தடுப்பூசி போட்டுகொண்டோர் சிறப்பு பயணத்தில் இதுவரை 5,100 பேர் வருகை – 5 பேருக்கு கோவிட்-19 பதிவு