சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!

more-singaporeans-plan-vacations-goal-sleep
Unsplash

தலையணைகள் மற்றும் மெத்தைகளை ஆன்லைனில் விற்கும் “Sonno” நிறுவனம், தூங்குவதற்கு ஒருவரை வேலையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என 100 நாட்களுக்கு தூங்க ஒருவரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்.!

நிறுவனம் தனது “ஸ்லீப் எக்ஸிகியூட்டிவ்” வேலைக்கான விண்ணப்பதாரர்களைக் தேடி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.

தூக்கத்தில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 6 முதல் 19 வரை ஸ்லீப் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலி, அக்டோபர் 1க்குள் தெரிவிக்கப்படுவார்.

அதற்கான சம்பளமாக S$1,500 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான படுக்கைகள் இலவசமாகக் வழங்கப்படும், வேலையில் தேந்தெடுக்கப்படும் நபர், தங்களின் அனுபவத்தை சமூக ஊடகங்களில் வித்தியாசமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிக்க – sleepsonno