சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி… 120க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – $330,000 தொகை இழப்பு

social media scam aware
SPF

சமூக ஊடக வழி ஆள்மாறாட்ட மோசடிகளில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன் குறைந்தது $330,000 தொகையையும் இழந்துள்ளனர்.

அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளுக்கு இடையில் அவர்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் புதிய நடைமுறை – 2024 முதல் அமல்

சமீபகாலமாக ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

பல்வேறு பிராண்டுகளில் இருந்து அன்பளிப்பு அல்லது ரொக்க பற்றுசீட்டுகள் கிடைத்திருப்பதாக கூறி சமூக ஊடக தளங்களில் மோசடி கும்பல் தங்களின் போலி வலையை விரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சமூக ஊடகக் கணக்குகள் மோசடி நபர்களால் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கைப்பேசி எண்கள் அல்லது மைக்ரோசாஃப்ட், கிராப் மற்றும் கூகுள் போன்ற பல்வேறு தளங்களில் இருந்து அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) அனுப்பும் படியும் கேட்பார்கள் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“லாரி பயணத்தை தடை செய்தால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம்” – எச்சரிக்கும் அரசாங்க அமைப்புகள்