சூரிய கிரஹணம்: இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Photo: Hindu Endowments Board

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று சூரிய கிரஹணம் (Solar Eclipse) நிகழ உள்ளது. இந்த கிரஹணம் சிங்கப்பூரில் தெரியும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) அறிவித்துள்ளது.

அக்.14- ஆம் தேதி சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

சூரிய கிரஹணம், ஏப்ரல் 20- ஆம் தேதி அன்று காலை 10.45 AM மணிக்கு தொடங்கி, மதியம் 12.59 PM மணிக்கு முடியும். இந்த நிலையில், இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்களில் சூரிய கிரஹணத்தன்று காலை 09.00 மணிக்குள் காலசந்தி மற்றும் உச்சிக்கால பூஜைகள் முடிந்தவுடன் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 05.00 மணிக்கு புனியாகவாசனம் மற்றும் சாயரசைஷ பூஜைகள் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.