உதவி தேவையுடையோருக்கு உதவ 24 மணி நேர வாட்ஸ்அப் சேவை!

SOS launches 24-hour WhatsApp service

சிங்கப்பூர் உதவும் ஆலோசனைச் சங்கம் – SOS துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவ 24 மணி நேர வாட்ஸ்அப் சேவையை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரில் 10 முதல் 29 வயதுக்குட்பட்ட நபர்களின் மரணத்திற்கு தற்கொலையே முக்கிய காரணமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த தடை – நிறுவங்களுக்கு இனி கடும் நடவடிக்கை தான்: MOM அதிரடி

அதாவது கடந்த ஆண்டு, 378 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கண்ட வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அதுபோன்ற மரணங்களை தடுக்கும் வகையில் இந்த வாட்ஸ்அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுபவர்கள் CareText என்னும் அந்த சேவை வழியாக 9151 1767 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் அல்லது ஹாட்லைனைத் தொடர்புகொள்ள 1767 என்ற எண்ணை அழைக்கலாம்.

தொடர்பு செய்யக்கூடிய நபர்களின் தொலைபேசி எண்களை யாராலும் பார்க்க முடியாத வண்ணம் அந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Work permit இல்லை, பொழுதுபோக்கு சேவை: சிங்கப்பூரில் ஆண், பெண் உட்பட 31 பேர் கைது