தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு…. பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு.... பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?
Photo: Team Singapore

 

 

கம்போடியாவில் நடைபெற்று வந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நிறைவுப் பெற்றது.

செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!

கம்போடியா நாட்டின் தலைநகர் புனோம் பென் (Phnom Penh) நகரில் கடந்த மே 5- ஆம் தேதி அன்று தொடங்கிய தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் மே 17- ஆம் தேதி அன்று கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த போட்டிகளில் புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, ஈஸ்ட் திமோர், வியட்நாம் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர்.

இதில் 136 தங்கம், 105 வெள்ளி, 104 வெண்கலம் என 355 பதக்கங்களை வென்று வியட்நாம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 51 தங்கம், 42 வெள்ளி, 64 வெண்கலம் என 157 பதக்கங்களுடன் சிங்கப்பூர் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இது குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம்

பதக்கப் பட்டியலில் 313 பதக்கங்களுடன் தாய்லாந்து இரண்டாவது இடத்திலும், 276 பதக்கங்களுடன் இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நிறைவு விழாவில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.