செவியோரம் மரண ஓலம் எட்டிப் பாக்குதா? – தென்கொரிய கூட்ட நெரிசலில் சிக்கிய சிங்கப்பூரர்;மூச்சுத்திணறி தவித்த பரிதாபம்

South_Korea_Halloween_Crowd-

தென்கொரிய கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது.கொண்டாட்டத்தில் மக்கள்அதிகளவில் பங்கேற்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் சிங்கப்பூரர்களும் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிங்கப்பூரர்கள் குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.சுமார் 153 பேர் உயிரிழந்த நிலையில் சிங்கப்பூரர் ஒருவர் நெரிசலில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

உயிர்தப்பிய கோ மிங் கேன் தமது இரு சிங்கப்பூர் நண்பர்களுடன் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு களிப்பில் ஆழ்ந்திருந்த போது திடீரென நெரிசலில் சிக்கிக் கொண்டார்.கடும் தள்ளுமுள்ளுக்கு ஆளான அவர் உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அலைபோன்ற மக்கள் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் மோதி பலர் கீழே விழுந்தனர்.கூட்டத்திலிருந்து அவரும் அவர் நண்பர்களும் தப்பிக்க முயன்ற போது மூச்சுவிட சிரமமாக இருந்ததாகவும் கூறினார்.

அப்போது தரையிலிருந்து சற்று உயரத்தில் இருந்த விளிம்பில் ஏறிய அவர் அருகிலிருந்த மதுக்கடை ஒன்றுக்குள் நுழைய முயன்ற போது அதன் பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.மேலும்,அவரைக் கண்ட பலரும் தம்மை மேலே தூக்கும்படி அவரை எட்டிப்பிடித்ததாகவும் கூறினார்.அவரால் இயன்ற வரை முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அது மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்ததால் முடியவில்லை.கூட்ட நெரிசலிலிருந்து அவர் கடைசியாக தப்பியதாகவும் சில காயங்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் சிக்கி மயங்கியவர்களையும் இடிபட்டவர்களையும் ஒப்பிடும்போது இவரது நிலை பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மரணபயம்னா இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்திருப்பார் போல அந்த மனிதர்.