தெற்கு இந்தோனேசிய பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஐரோப்பிய பூகம்ப கண்காணிப்பு நிறுவனம் கூறுவது என்ன?

earthquake

பாலிக்கு தெற்கே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜுலை 16 செவ்வாய் அன்று தெற்கு இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் பேரழிவு மேலாண்மை முகமை குறிப்பிடுகையில், காலை 7.20 மணியளவில் சுமார் 68 கிலோ மீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஏற்பட்டதாக தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சுனாமிக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பியா பூகம்ப கண்காணிப்பு நிறுவனம் EMSC கூறுகையில், இந்த நிலநடுக்கம் பாலியின் தென்மேற்கு டென்பாசர் மையப்பகுதியில் சுமார் 102 கி.மீ தொலைவிலும் மேலும், 100 கி.மீ ஆழத்திலும் நிலைகொண்டிருந்ததாக கூறியது.

சுனாமி எச்சரிக்கை எதும் விடவில்லை என ஹாவாய் சார்ந்த பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் ஆரம்ப அளவு 5.7 என அமெரிக்க புவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தோனேசியாவின் கிழக்கே மாலுகு தீவில் ஜுலை 14 ஞாயிற்றுக்கிழமை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.