ஆடி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

ஆடி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
Photo: Sri Mariamman Temple

 

சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் மிகவும் பழமையானது. சிங்கப்பூர் அரசு, இந்த கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.

மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

விஷேச நாட்களில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை 18- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆடி மாதம் முதல் நாள் மற்றும் ஆடி அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், தங்க நகைகள் அணிவிக்கப்பட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

உலகின் மதிப்பு மிகுந்த பாஸ்போர்ட்… சிங்கப்பூர் மீண்டும் முதலிடம் – 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்

இந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, சுவாமி ஊர்வலமும் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. ஆடி மாதத்தில் நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.