வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் ஏன் தொக்கா பார்க்கிறாங்க? சிங்கப்பூரில் இப்படியொரு ரூல்ஸ் இருப்பது பலருக்கும் தெரியாது!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் விடுதியை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் மட்டுமே வெளியில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. வெளியில் வர வேண்டும் என்றால் எக்ஸிட் பாஸ் வாங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தளர்த்தப்பட்டது. இன்று முதல் கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

வெளியில் வர மட்டும் தான் எக்ஸிட் பாஸ் வாங்க தேவையில்லை. ஆனால் லிட்டில் இந்தியா, சைனா டவுன், கேலாங் செராய், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலோ பொது விடுமுறை நாள்களிலோ செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் ‘பாப்புலர் பிளேஸ் பாஸ்’ எனும் அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு நாளில் மொத்தம் 80,000 பேருக்கு இத்தகைய அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது. சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் ‘எக்ஸிட் பாஸ்’ இல்லாமலே தாங்கள் வெளியில் வந்திருப்பதாகக் கூறினர்.

10 விழுக்காட்டினருக்கு நாளை நடப்புக்கு வரும் புதிய நடைமுறை குறித்தும் தெரிந்திருக்கவில்லை. சிலர் ‘எக்ஸிட் பாஸ்’ விண்ணப்ப முறை குழப்பம் அளிப்பதாகக் கூறினர்.

சிங்கப்பூர் சமூகத்தின் இதர தரப்பினரைப் போன்றே வெளிநாட்டு ஊழியர்களும் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லவும் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வெளிநாட்டு ஊழியர் நல அமைப்புகள் கோருகின்றன.