இறந்து கிடந்த போலீஸ் அதிகாரி.. “வேலையிடத்தில் பாகுபாடு, துன்புறுத்தல்” – பதிவு வெளியிட்டு மரணம்

spf-officer-dies-facebook-post
File Photo Via The Singapore Police Force

யுஷூன் பிளாக்கின் கீழ்த்தளத்தில் அசையாமல் கிடந்த சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்பு தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது; மகிழ்ச்சியற்ற நிலையையும், அவரது வேலையிடத்தில் உள்ள குறைகளையும் விவரித்துள்ளார்.

இந்தியரை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரும் சிங்கப்பூர் போலீசார்

நேற்று ஜூலை 21 அன்று, பிளாக் 393 யுஷூன் அவென்யூ 6 இன் கீழ்த்தளத்தில் 36 வயது போலீஸ் அதிகாரி அசையாமல் கிடந்தது குறித்து காவல்துறை உறுதிப்படுத்தியது.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர் உயிரிழந்தார் என்றும் SPF கூறியுள்ளது.

பேஸ்புக்கில் ராஜ கோபால் என்ற அந்த போலீஸ் அதிகாரி, நேற்று (ஜூலை 21) மாலை 4:36 மணிக்கு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், அவர் முழு பெயர் யுவராஜா S/O கோபால் என்று குறிப்பிட்டுள்ளார். யுவராஜாவின் கூற்றுப்படி, அவர் 18 வருடங்கள் போலீஸ் அதிகாரியாக இருந்துள்ளார், மேலும் சார்ஜென்ட் பதவியையும் வகித்தார்.

மேலும் அவர் பதிவில் கூறியதாவது; வேலையிடத்தில் அவர் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டார் என்றும், பாகுபாடு காட்டப்பட்டார் என்றும் விவரித்துள்ளார்.

இன அவமதிப்புகளுக்கு ஆளானதாகவும், அவர் மோசமான வேலை கலாச்சாரத்தை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் இந்தியர் என்பதால் பல கேலி சொற்களை பயன்படுத்தி வேலையிடங்களில் இன பாகுபாடு நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து உதவி நாடியதாகவும், ஆனால் அது கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லக்கி பிளாசாவில் S$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இருவர்