நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், இந்த வழியில் ஏமாற்றப்படலாம்… சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் உஷார்!

scams Suspects investigated
Photo: Pickawood/Unsplash

போலி SMSகள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை கலந்த எச்சரிக்கையை சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், அவருக்கு வந்த லோன் மோசடி SMSக்கு தனது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மோசடியில் பாதிக்கப்பட்ட OCBC வங்கி வாடிக்கையாளர்கள் – மேற்பார்வை நடவடிக்கை மேற்கொள்ள MAS பரிசீலனை!

லோன் வழங்கப்படுவதற்கு முன்பு, அவரிடம் நிர்வாக அல்லது பரிமாற்றக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு முன்பணத்தை வங்கி மூலம் அனுப்பும்படி மோசடி கும்பல் கேட்டுள்ளது.

லோன் ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கும் போது, ​​”SPF” என்ற தலைப்புடன் போலி SMS ஒன்று அவருக்கு வந்துள்ளது.

அந்த SMS செய்தியில், பணமோசடி தொடர்பான குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், கூடுதல் தகவலுக்கு SMSஇல் பட்டியலிடப்பட்டுள்ள விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த SMS செய்திகள் எதுவும் SPF அதிகாரிகளால் அனுப்பப்படவில்லை என்பதை SPF தெளிவுபடுத்தியது.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் இது போன்ற மோசடியில் சிக்கி விடாமல், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் 1000ஐ தாண்டிய தொற்று பாதிப்பு – 534 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்