வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை: ஓட்டுனர்களுக்கு வரப்பிரசாதம்!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம் என மேலும் 8 பள்ளி பேருந்து நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

Singapore Jobs: 1,700 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… 40 நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல் – ஆக. 4, 5 மட்டும்; முன்பதிவு செய்யலாம்

இதனால் பள்ளி பேருந்து சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் என்ன செய்வது என்று அறியாமல் தடுமாறி வந்தன.

இந்நிலையில், மேலும் 8 பள்ளி பேருந்து நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம் என்ற அனுமதி வெளியாகியுள்ளது.

முன்னர் 6 நிறுவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம், தற்போது 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 14 நிறுவனங்களுக்கு அந்த அனுமதி கிடைத்துள்ளது.

இதனால் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதவள நெருக்கடி காரணமாக ஒப்பந்தங்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதலை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்