சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

spore-tour-bus-overturn-msia-trap-three
Mothership

சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து நேற்று முன்தினம் டிசம்பர் 27, அன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.

சுமார் 36 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஜோகூரில் உள்ள Sedenak நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து, தலா S$500 கமிஷனுக்கு மலேசியா அனுப்பிவைத்த ஏஜென்சி பெண்

இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Photo: Mothership reader

டிசம்பர் 27 அன்று அதிகாலை 3:54 மணியளவில் ஜொகூர், கூலாய் அருகே மலேசியா வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Photo: Mothership reader
Photo: Mothership reader

விபத்தில் பேருந்தின் பின்புற இருக்கையில் மூன்று பயணிகள் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தின் நடந்த போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது என்றும், ஆகையால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி கவிழ்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் வேலை.. “திருமணமான ஊழியர்களுக்கு” மட்டுமே அனுமதி என வைக்கப்பட்ட போஸ்டர்