சீனப் புத்தாண்டு, காதலர் தினத்தில் “நாங்கள் வாடகைக்கு” கிடைப்போம் – களம் இறங்கும் சிங்கப்பூர் டிக்டாக்கர்ஸ்!

f0xypony, cold.by and _wayneee_'s TikTok

வரும் பிப்ரவரி மாதத்தில் இரண்டு கொண்டாட்டங்கள் வருகின்றன, ஒன்று சீனப் புத்தாண்டு மற்றொன்று காதலர் தினம்.

புதிய TikTok ட்ரெண்டின் ஒரு பகுதியாக, இந்தக் கொண்டாட்ட தினங்களில் Stand-in பார்ட்னராக “வாடகைக்கு” வர நாங்கள் தயார் என்று சிலர் களம் இறங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

அதாவது இந்த Stand-in பார்ட்னர் என்பது ஒருவருக்கு பதிலாக இருப்பது என்பதை குறிக்கும்.

அந்த வகையில், cold.by என்னும் ஒரு TikTok பயனர், அவர் பிப்ரவரி 2 மற்றும் பிப்ரவரி 14ஆம் தேதிகளில் வாடகைக்கு கிடைப்பேன் என்று கூறியுள்ளார்.

அதற்கான கட்டணங்கள் மாறுபடுகின்றன, S$50 முதல் S$5000 வரை கட்டணங்களில் பல்வேறு செயல்பாடுகளை அவர் வழங்குவார்.

குறிப்பிட்ட விசேஷ தினங்களில் தன்னை விளம்பரம் செய்யும் இந்த போக்கு புதிதல்ல.

கடந்த ஆண்டுகளில், இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் பெரும்பாலும் இடம்பெற்றன.

பயனியர் சாலை அருகே தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – கட்டுமானக் கழிவுகளின் பெரும் குவியலில் பற்றிய தீ