ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா!
Photo: Sri Vairavimada Kaliamman Temple

 

 

சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 டோவா பயோஹ்-ல் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). வரும் மே 24- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு சக்தி கரகமும், இரவு 07.30 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்வும், இரவு 09.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராமர் சந்திப்பு!

மே 25- ஆம் தேதி முதல் மே 29- ஆம் தேதி வரை காலை 09.00 மணிக்கு ஸ்ரீ அங்காளம்மன் சிறப்பு அபிஷேகமும், காலை 10.00 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகமும், இரவு 07.30 மணிக்கு ஸ்ரீ அங்காளம்மன் உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

சிங்கப்பூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

மே 29- ஆம் தேதி திங்கள்கிழமை காலை 09.30 மணிக்கு மஞ்சள் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.