ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா குறித்த முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா குறித்த முக்கிய அறிவிப்பு!
Photo: HEB

 

சிங்கப்பூரின் செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா (Sri Anjanayer Jayanthi) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 71 பேர் கைது

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 2024 ஜனவரி 11- ஆம் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்படும். வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 10- ஆம் தேதி வரை பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை வழிபாடு செய்யலாம். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். வரும் ஜனவரி 10- ஆம் தேதி வரை வடை மாலைக்கான சீட்டுகள் வழங்கப்படும்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளான 2024 ஜனவரி 11- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஹோமமும், திருமஞ்சனமும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு பிரசாதமும் விநியோகிக்கப்படும்.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் கைப்பெட்டிகளை சோதிக்க AI செயற்கை நுண்ணறிவு முறை – சோதனை

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.