‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அர்ச்சுனன் தபசு நடைபெறும்’ என அறிவிப்பு!

'ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ அர்ச்சுனன் தபசு நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple), வரும் அக்டோபர் 06- ஆம் தேதி அன்று ஸ்ரீ அர்ச்சுனன் தபசு (Sri Arjunan Thabasu) நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

வரலாற்று சாதனைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் 06- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ அர்ச்சுனன் தபசு நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளைப் பார்வையிடலாம்:

அக்டோபர் 06- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு சங்கல்பமும், விக்னேஸ்வர பூஜையும், காலை 09.30 மணிக்கு புண்ணியாகவாஜனமும், காலை 10.00 மணிக்கு தபசு மரத்திற்கு சிறப்பு பூஜையும், மாலை 07.30 மணிக்கு ஸ்ரீ அர்ச்சுனன் தபசு நிகழ்வும் நடைபெறுகிறது.

யுஷுனில் கார் என்ஜின் பலத்த சத்ததுடன் வெடித்து தீ விபத்து

பூஜைகளை மாலை 07.30 மணி முதல் https://youtu.be/-ZyeXIH_rgc (அல்லது) https://www.youtube.com/hinduendowmentsboard ஆகிய இணையப் பக்கங்களில் நேரலையாகக் காணலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) https://heb.org.sg/ என்ற இணையத் தளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில், குழந்தை மற்றும் திருமணம் வரம் வேண்டி, பெண்கள் அர்ச்சுனன் தபசு மரத்தை சுற்றி வந்து வணங்கினால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.