ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம்!

Photo: Hindu Endowments Board

“சிங்கப்பூரில் உள்ள 397 சிராங்கூன் சாலையில் (397 Serangoon Road) அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில், வரும் மே 5- ஆம் தேதி முதல் மே 13- ஆம் தேதி வரை காலை 08.00 AM மணி முதல் காலை 11.45 AM மணி வரை ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகமும் (Sri Asthalakshmi Maha Yaagam), மாலை 05.30 PM மணி முதல் இரவு 08.45 PM மணி வரை ஸ்ரீ அஷ்டலட்சுமி யாகமும் நடைபெறும்.

செங்காங் குழுத்தொகுதியில் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணியை வழங்கிய ஜேமஸ் லிம் எம்.பி.!

அதேபோல், வரும் மே 14- ஆம் தேதி அன்று காலை 08.00 AM மணி முதல் காலை 11.30 AM மணி வரை ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகமும், காலை 08.30 AM மணிக்கு சுமங்கலி பூஜையும் நடைபெறும். மே 5- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் மே 14- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

தைவான் சுற்றுலாத் துறையின் அதிரடி அறிவிப்பு…வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) குறிப்பிட்டுள்ளது.