ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல்!

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல்!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமையான கோயில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சைனா டவுன் வட்டாரத்தில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த கோயில் என்பதால், நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் உள்ளது.

உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?

இக்கோயிலில் வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல் (Sri Drowpathai Amman Malaiyiduthal) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ திரௌபதை அம்மன் மாலையிடுதல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 06.30 மணிக்கு சங்கல்பம் பூஜையும், மாலை 06.45 மணிக்கு புண்ணியவாஜனமும், இரவு 07.15 மணிக்கு அம்மனுக்கு மாலையிடுதலும், இரவு 08.00 மணிக்கு ஸ்ரீ அர்ஜுனன் மற்றும் கல்யாண திரௌபதை அம்மன் கோயிலுக்குள் உலா வரும் நிகழ்வும், இரவு 08.45 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

சிங்கப்பூரில் உள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பாதுகாப்பை வலுப்படுத்திய காவல்துறை

இந்த நாளில் பக்தர்கள் கோயிலில் சிறப்பு பிரார்த்தனைச் செய்யலாம். இந்த நிகழ்ச்சியை இந்து அறக்கட்டளை வாரியத்தின் https://www.youtube.com/hinduendowmentsboard என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.