சிங்கப்பூரில் உள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பாதுகாப்பை வலுப்படுத்திய காவல்துறை

Bomb threats received at 18 locations around Singapore
Leonard Chia/Google Maps

சிங்கப்பூரில் உள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.

நேற்று ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 9:10 மணியளவில் இந்த மிரட்டல் குறித்து காவல்துறை உஷார் படுத்தப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?

மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் அரசாங்க கட்டிடங்கள், தூதரகங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களும் அடங்கும்.

அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். ஆனால், அச்சுறுத்தும் பொருட்கள் எதுவும் சோதனையில் கண்டறியப்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சமீபத்தில் கொரியா நாட்டுக்கும் அதே நபர் மூலம் மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது ஒரு புரளியாக மாறியதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களையும் போலீசார் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தவறான தகவல்களை வேண்டுமென்றே தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Environment Building தொடர்பாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வேலையிடங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் உறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. லாரி பயணத்துக்கு மாற்றா? கொதிக்கும் நெட்டிசன்கள்