ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமம்!

Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில், இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board- ‘HEB’) கீழ் உள்ளது. இந்த கோயிலில், ஸ்ரீ திரௌபதை அம்மன் பிரார்த்தனை பூஜை ஹோமத்தை (Sri Drowpathai Amman Prarthanai Poojai Homam) முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ஜூலை 05- ஆம் தேதி புதன்கிழமை முதல் ஜூலை 09- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் நடத்தப்படும்.

இடம் மாறிய முகவரியை தெரிவிக்காத நபருக்கு S$3,700 அபராதம் – செலுத்தத் தவறினால் சிறை

ஜூலை 09- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் மஞ்சள் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். மஞ்சள் குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

சக ஊழியர் மீது வெந்நீரை ஊற்றிய ஊழியருக்கு சிறை

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், இந்து அறக்கட்டளை வாரியத்தின் https://heb.org.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.