இடம் மாறிய முகவரியை தெரிவிக்காத நபருக்கு S$3,700 அபராதம் – செலுத்தத் தவறினால் சிறை

இடம் மாறிய முகவரியை தெரிவிக்காத நபருக்கு S$3,700 அபராதம்
Credit: Mothership

வீட்டின் முகவரியை மாற்றிய ஆடவர் அதனை முறையாக தெரிவிக்கத் தவறியதற்காக அவருக்கு S$3,700 அபராதம் விதிக்கப்பட்டது

முஹம்மது தௌபிக் ஹிதாயாத் கம்சின் என்ற அந்த சிங்கப்பூர் நபர், வீடு மாறிய தகவலை 28 நாட்களுக்குள் ICA ஆணையத்திடம் தெரிவிக்க தவறியுள்ளார்.

துவாஸ் தொழிற்பேட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து

இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறினால் அவருக்கு 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஆண்டு முதல் அவர் மீது நகரச் சீரமைப்பு ஆணையம் ICA விடம் புகார் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசார் அவரை கைது செய்ய சென்றபோது அவர் வீட்டை மாற்றியதும், தொடர்பு கொள்ள எந்த தகவலும் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து மாறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தேசிய பதிவுச் சட்டத்தின் கீழ், அடையாள அட்டை (IC) வைத்திருப்பவர்கள் அனைவரும் தாம் வசிக்கும் இடத்தை மாற்றும் போது அந்த தகவலை 28 நாட்களுக்குள் ICA விடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறினால் S$5,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற ஊழியரை கடத்திய கும்பல்.. மடக்கிய போலீஸ் – விசாரணையில் உண்மை அம்பலம்