துவாஸ் தொழிற்பேட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து

துவாஸ் தொழிற்பேட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து Huge fire in Tuas
SCDF

துவாஸ் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

11 துவாஸ் இணைப்பு 1இல் இன்று நள்ளிரவு 2.05 மணியளவில் இந்த  தீ விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற ஊழியரை கடத்திய கும்பல்.. மடக்கிய போலீஸ் – விசாரணையில் உண்மை அம்பலம்

தீயானது சுமார் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பற்றி எரிந்ததாக SCDF ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

இந்த தீயணைப்பு பணியில், சுமார் 100 தீயணைப்பு வீரர்கள், 30 அவசரகால வாகனங்கள் மற்றும் சிறப்பு மீட்புப் பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இரசாயனங்கள் சேமிக்கப்பட்டு விநியோகம் நடைபெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணத்தை SCDF வெளியிடவில்லை.

யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரயில் சேவைகள் அதிகாலை (ஜூலை 5) நேரத்தில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் வழக்கநிலைக்கு திரும்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club