ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி அலங்காரம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 தோவா பயோஹ் (2001 Lor 8 Toa Payoh) பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி சிறப்பு பூஜை நடைபெறும். இதற்காக, விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்கலாம். சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி ஏர்போர்ட் 9வது இடம் – முதல் இடம் எது தெரியுமா?

அதன்படி, ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று மாலை 07.00 மணிக்கு ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி சிறப்பு பூஜையும், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் மற்றும் பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

ஏப்ரல் 13- ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அபிஷேகமும், மாலை 07.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு பூஜையும், பிரசாதமும் வழங்கப்படும்.

ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று காலை 07.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அபிஷேகமும், மாலை 06.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு பூஜையும், பிரசாதமும் வழங்கப்படும்.

விமானத்தில் ரகளை செய்த பயணியை இறக்கிவிட்ட விமான நிறுவனம்!

ஏப்ரல் 15- ஆம் தேதி அன்று காலை 06.00 மணிக்கு சுப்ரபாதம் மற்றும் விஷு கனி பூஜையும், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ராங்கி அலங்காரமும், மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும். மாலை 07.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு பூஜையும் மற்றும் பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.