“இலங்கை- சிங்கப்பூர் இடையே VTL, Non- VTL விமான சேவை”- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Sri Lankan

சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் (Vaccinated Travel Lane- ‘VTL’), இந்தியா, மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, புரூணை, இலங்கை, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இரு மார்க்கத்திலும் விமானங்களை இயக்க அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிறுவனங்களும் பயணிகளுக்கான விமான சேவையைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. அதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ‘Non- VTL’ விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ‘Non- VTL’ விமானங்களையும் விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றனர்.

சுமார் S$167,000 மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான நிறுவனம் இலங்கை- சிங்கப்பூர் இடையே VTL, Non- VTL விமான சேவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பில், “இலங்கை- சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ‘VTL’ விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், வாரத்தில் வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ‘Non- VTL’ விமானங்கள் இயக்கப்படும். விமான சேவையானது வரும் டிசம்பர் 17- ஆம் தேதி முதல் தொடங்கப்படும். இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக Work Permit கிடைக்குமா? மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள்!

எனினும், சிங்கப்பூர் வரும் பயணிகள், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.