டோக்கியோவில் சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்துப் பேசிய இலங்கை அதிபர்!

Video Crop Image

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி திருமதி லீ ஆகியோர் டோக்கியோ சென்றனர். அங்கு ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஷின்சோ அபேவின் மனைவி மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோருக்கு நேரில் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

‘நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

அதைத் தொடர்ந்து, டோக்கியோவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை இலங்கை நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை அதிபர் அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று கட்டப்பட்டிருப்பது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சிங்கப்பூர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பின்னர், சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும், இலங்கை அதிபர் குறிப்பிட்டார். இதனை வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இலங்கைக்கு வருமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் மூலம் இலங்கையில் சிங்கப்பூர் விரைவில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.