ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண வரும் பக்தர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயிலில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.25 மணி முதல் காலை 09.15 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து சாலை அமைத்துள்ள சிங்கப்பூர்… இந்த ஐடியா நல்லாருக்கே…

கும்பாபிஷேகம் தொடர்பான பூர்வாங்க சடங்குகளிலும், பூஜைகளிலும், மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு பக்தர்களைக் கேட்டுக் கொள்ளப்படுவதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

Photo: Hindu Endowments Board
Official Facebook Page

சவுத் பிரிட்ஜ் சாலையின் ஒரு பகுதி கும்பாபிஷேகத்தைக் காண வரும் பக்தர்களுக்கான பார்வையாளர் பகுதிகளை அமைப்பதற்கு மூடப்படும். கோயிலில் பாதணிகள் அணியக் கூடாது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் பாதணிகளை எடுத்துச் செல்ல பைகள் வழங்கப்படும். மஹா கும்பாபிஷேக விழாவுக்குப் பக்தர்கள் பெருந்திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சில கால தாமதங்களை எதிர்பார்க்கலாம்.

பிப்ரவரி 12- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மேக்ஸ்வெல் (Maxwell) உணவங்காடி நிலையத்துக்கு எதிர்புறம் அமைக்கப்படும் கூடாரத்தில் அன்னதானம் பரிமாறப்படும். அன்னதான இடத்துக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.

Photo: Hindu Endowments Board
Official Facebook Page

மஹா கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க நிகழ்ச்சிகள், சடங்குகள் மற்றும் மஹா கும்பாபிஷேக விழாவைப் பக்தர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக வலைத்தளங்களில் காணலாம்.

மஹா கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை:

மஹா கும்பாபிஷேகத்துக்காக கீழக்காணும் சாலைகள் பிப்ரவரி 11- ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.00 மணி முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி வரை சாலைப் போக்குவரத்து மூடப்பட்டிருக்கும்.

Photo: Hindu Endowments Board
Official Facebook Page

மஹா கும்பாபிஷேகத்திற்கு டாக்சி மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள்,எம் என் டி (MNT) கட்டிடத்திற்கு அருகில் உள்ள மேக்ஸ்வெல் சாலை, நீல் சாலை, தஞ்சோங் பகார் சாலை, நியூ பிரிட்ஜ் சாலை, அப்பர் க்ரோஸ் ஸ்திரீட் @ சைனா டவுன் எம்ஆர்டி எக்சிட், க்ரோஸ் ஸ்திரீட் (Cross Street) மற்றும் க்ரோஸ் ஸ்திரீட் எக்ஸ்சேஞ்ச் (Cross Street Exchange) ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இறங்கி, கோயிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கும்பாபிஷேகத்தைக் காண வரும் பக்தர்கள் பார்வையாளர் பகுதிகளுக்குச் செல்ல, தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள மேக்ஸ்வெல் எம்ஆர்டி (MRT) நிலையத்தில் எக்சிட் (EXIT ‘1’) மற்றும் எக்சிட் (EXIT ‘3’) வெளியேறும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Photo: Hindu Endowments Board
Official Facebook Page

61, 80, 145, 166 மற்றும் 196 ஆகிய பேருந்துச் சேவைகள் பிப்ரவரி 11- ஆம் தேதி இரவு 11.00 மணி முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணி வரை சவுத் பிரிட்ஜ் சாலை மற்றும் நீல் சாலை மற்றும் தஞ்சோங் பகார் சாலை வழியாக செல்லாது. இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.