‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்’- பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமையான கோயில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

சிங்கப்பூரில் இனி குழந்தை பிறந்தால் S$11,000 போனஸ் – 3 அல்லது அதற்கு மேல் S$13,000 போனஸ்

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் உள்ளிட்டோரும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 13- ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 1- ஆம் தேதி வரை மண்டலாபிஷேகத்தில், நாள்தோறும் மாலை பக்தி பாடல்கள், இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்து அறக்கட்டளை வாரியமும், கோயில் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் நீக்கம்: முகக்கவசம் எங்கு அணிய வேண்டும்? எந்த ஊழியர்களுக்கு கட்டாயம்

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருமண மண்டபம் நிலை- 2ல் (Wedding Hall, Level 2) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட பின்னணி பாடகரான பி.உன்னிகிருஷ்ணன் மற்றும் குமாரி உத்ரா ஆகியோர் கலந்துக் கொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு இந்து அறக்கட்டளை வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.