ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு!

Chief priest of Sri Mariamman Temple gold
(Photo: panoramio.com)

சிங்கப்பூரின் பழமையான இந்து கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர் மீது நீதிமன்றத்தில் நம்பிக்கை மீறல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் S$2 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள நகைகள் மீதான நம்பிக்கையை மீறி அதனை அடகு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2021: S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு குறைக்கப்படும்…

குற்றச்சாட்டுகள்

37 வயதான கந்தசாமி சேனாபதி, ஊழியர் என்ற நம்பிக்கையை மீறியதாக ஐந்து குற்றச்சாட்டுகளும், ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ் 5 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

கந்தசாமி கோயிலில் இருந்து தங்க ஆபரணங்களை எடுத்து, 2016 – 2020க்கு இடையில் பலமுறை அடகு வைத்து பணத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த அடகு வைத்த நகைகளின் மதிப்பு S$2 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பட்ஜெட் 2021: விமானத்துறைக்கு S$870 மில்லியன் நிதி உதவி

இந்தியர்

இந்திய நாட்டைச் சேர்ந்த கந்தசாமி, சுமார் S$141,000க்கும் அதிகமானவற்றை நாட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

நகைகளை எடுத்துச் சென்று அவற்றைக் அடகு வைப்பது மற்றும் தன்னிடம் பணம் இருக்கும்போது அவற்றை மீட்பது போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டபோது, ​​நகைகளை மீட்டெடுக்க அவரால் நிதியை திரட்ட முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

விசாரணை

கந்தசாமி, பின்னர் அடகு வைத்த நகைகளை மீட்டெடுத்து அனைத்தையும் கோவிலில் திருப்பி ஒப்படைத்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், காந்தசாமியின் பொறுப்பில் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2021: தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் நீட்டிக்கப்படும்!