ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து தலைமை பூசாரி கைது..!

Chief priest of Sri Mariamman Temple gold
(Photo: panoramio.com)

சிங்கப்பூரின் பழமையான இந்து கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரியின் பொறுப்பில் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றைய (ஆகஸ்ட் 1) ஊடக அறிக்கையில், தங்க ஆபரணங்கள் காணவில்லை என்று சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!

கோவில் பூசைகளுக்குப் அடிக்கடி பயன்படுத்தப்படும் அந்த தங்க ஆபரணங்கள் கோயிலின் உள் கருவறையில் தலைமை பூசாரி பொறுப்பில் வைக்கப்படுகின்றன. அந்த தங்க ஆபரணங்களை உறுதி செய்வதற்காக வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, தலைமை பூசாரி விசாரிக்கப்பட்டதாகவும், பின்னர் காணாமல் போன அனைத்து நகைகளையும் திருப்பி அளித்ததாக அது மேலும் கூறியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் வேறு எந்த நபரும் ஈடுபடவில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் நம்பிக்கையை மீறியதற்காக 36 வயதான அவர் கைது செய்யப்பட்டார். தற்போது தலைமை பூசாரி ஜாமீனில் உள்ளார் என்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg