ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை!

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை!
Photo: Hindu Endowment Board

 

 

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை (Sri Periyachi Amman Padaiyal Poojai) முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் வரும் ஜூன் 7- ஆம் தேதி புதன்கிழமை முதல் ஜூன் 11- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) நடத்தப்படும்.

ஒடிசா ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் – சிங்கப்பூர் பிரதமர் லீ

வரும் ஜூன் 10- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

ஜூன் 7- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 04.30 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 07.10 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் மாலை 04.30 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 07.10 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

ஜூன் 10- ஆம் தேதி காலை 08.30 மணிக்கு ஹோமமும், ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு ருத்ரா அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு பால்குடம் அபிஷேகமும், மாலை 05.30 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு லட்சார்ச்சனையும், இரவு 08.00 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

CNA ஒளிப்பதிவாளர் சாலை விபத்தில் மரணம்

ஜூன் 11- ஆம் தேதி அன்று காலை 06.00 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 08.00 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு லட்சார்ச்சனையும், காலை 11.15 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.