ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி பெருவிழா!

'ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

வரும் டிசம்பர் 18- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் (Sri Senpaga Vinayagar Temple) விநாயகர் சஷ்டி பெருவிழா (Vinayagar Sashti Festival) நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெண்களை குறிவைத்து 18 ஆண்டுகளாக தகாத படங்களை எடுத்துவந்த கட்டுமான துறையை சேர்ந்தவருக்கு சிறை

சிங்கப்பூரில் 19 சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில், வரும் டிசம்பர் 18- ஆம் தேதி திங்கள்கிழமை காலை 08.15 மணி முதல் விநாயகர் சஷ்டி பெருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 08.15 மணிக்கு விநாயகருக்கு சங்கல்ப்பமும், மஹாகணபதி ஹோமமும், காலை 09.30 மணிக்கு மூலவருக்கும், பஞ்சமுக விநாயகருக்கும் விசேட அபிஷேகமும், காலை 11.05 மணிக்கு மூலவர் விசேட பூஜையும், காலை 11.20 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும், அதைத் தொடர்ந்து பஞ்சமுகார்ச்சனையும், நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜையும், பின்னர் அன்னதானமும் நடைபெறவுள்ளது.

இஸ்ரேல் தூதரகத்தின் வாசலில் வைக்கப்பட்ட பதாகை.. அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறிய பெண்ணிடம் விசாரணை

மாலை 04.15 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், மூலவருக்கு 1008 சங்காபிஷேகமும், மாலை 06.30 மணிக்கு சாயரட்சை விஷேட பூஜையும், இரவு 07.00 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும், இரவு 08.10 மணிக்கு பஞ்சமுக விநாயகர் பூந்தண்டிகையில் திருவீதி எழுந்தருளலும், இரவு 09.15 மணிக்கு அர்த்தசாம பூஜையைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருவிழாவை சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.