‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமம்’- பக்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 9வது வருட வருடாபிஷேகப் பெருவிழா-2024!'
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் (Ceylon Road) அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் வரும் 2027- ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மேலாண்மைக் குழு (Management Committee) சார்பில் மார்ச் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு கணபதி ஹோமம் (Ganapathy Homam) நடைபெறும்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி

இந்த கணபதி ஹோமத்தில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.